எனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம்மானது ஜல்லிக்கட்டு..



எண்ணற்ற தோழர்களை நான் சந்திக்க இது ஒரு வாய்ப்பாக இருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ்... எங்கு பேசினாலும் மாட்டை பத்திய பதிவுகள் இருந்தன. நானும் முதல் முறையாக பேசினேன். மனக்குமுறல்கள் வெளிவந்தன. நான் வளர்த்த இரண்டு மாடும் என்னோடு மோதும் லட்சுமி மாட்டின் ஞாபகம் வந்தது.

கோவையில் படித்துவிட்டு எனதுசொந்த ஊரான தஞ்சையில் இருக்கும் போது, எதுவுமே தெரியாமல்  என்னிடம்  மாடு  வளர்க்க  சொன்னார்கள்  எனது  அத்தை.  லட்சுமி மாட்டுக்கு  பேசினால் புரியும் என்பது அன்றுதான் என்னக்கு தெரியும்.வா சாப்பிடு என்றால் முறைக்கும்  பின்னாலயேவரும் பின்னர்... என் அத்தை வந்து சொன்னால் மட்டுமே கலனிஅருந்தும். பிறகு தினமும் அத்துடன் பேசிப்பேசி பழக்கத்திற்கு கொண்டுவந்தேன். நான் எனது  தலை பிரசவத்திற்கு செல்லும் பொது கண்ணீர் விட்டத்து என்றும் மறக்கமுடியாத நிமிடம்... :)  

Comments